We moved to a new location for 2025-26 school year
The new venue information --> St. Matthew Catholic School, 10703 Wurzbach Road, San Antonio, Texas 78230
- Fall Semester GB Meeting - Email Packet - Oct 17th, 2025
- President
SA Tamil School welcomes nomination for the below open positions in different committees
அன்பார்ந்த சான் ஆண்டோனியோ தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்
சான் ஆண்டோனியோ தமிழ் பள்ளி 19ஆம் ஆண்டுக்குள் நுழைகின்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் சில தமிழ் ஆர்வலர்களும் பல பெற்றோர்களும் தான்.
ஆனாலும் இதில் ஆசிரியர்களின் சேவை இல்லாமல் எதையுமே நினைக்க கூட முடியாது.
இதுவரை நாங்கள் எதிர்பார்க்காத அளவு தொண்டுள்ளம் கொண்ட சிலர் தாமாக முன்வந்து ஆசிரியர் பணி செய்தனர்.
இந்த ஆண்டு பல புதிய தன்னார்வ உள்ளங்களை வரவேற்க தயாராக உள்ளோம்.
தமிழ் பற்றும் ஆர்வமும் கொண்ட பல அன்பர்களையும் நண்பர்களையும் இந்த சிறந்த பணியை செய்ய முன் வருமாறு அழைக்கிறோம்.
எப்படி பாடம் சொல்லித்தருவது என்ற கவலையோ பயமோ தேவையில்லை.
இது மிகவும் எளிதான காரியம் தான். இந்த கல்வி ஆண்டு முதல் நமது பள்ளி டெக்சாஸ் தமிழ் அகாடமியின
பாடப் புத்தகங்களை தழுவ முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் ஆசிரியர் பயிற்சி மற்றும் தமிழ் பேசுவது, எழுதுவது, படிப்பது மற்றும் கேட்டு புரிந்து கொள்வது என்ற நான்கு மொழி கற்றல் நோக்கங்களில் மாணவர்களை எபபடி திறனடைய செய்வது என்ற வழி காட்டுதலையும் அளிப்பார்கள்.
இதனால் ஆசிரியர்களுக்கு பாடத்திட்டமும் பயிற்சியும் இனிதே வழங்கப்படும்.
பிள்ளைகளின் வகுப்புகளும் பல நிலைகளில் உள்ளது. எனவே நீங்கள் எந்த நிலை உங்களுக்கு ஏற்றதாக உள்ளதோ அந்த நிலையை
தேர்ந்தெடுத்து நடத்தலாம். உங்களது சேவை எங்களுக்கு தேவை. தங்கள் தொண்டை ஆர்வத்துடன் எதிர் பார்க்கும் சான் ஆண்டோனியோ தமிழ் பள்ளி குழு.
தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்:satamilschool@gmail.com
More Menu
Class Venue & Timings
Tamil classes are conducted at:
St. Matthew Catholic School, 10703 Wurzbach Road, San Antonio, Texas 78230
Tamil classes are held on:
Saturdays at 09:45 AM - 12:00 NOON
(Mun Mazhalai to E5)
09:45 AM - 12.30 PM
(I1A to 2B)
(3 weeks a month - Please refer to the calendar for schedule).
Contact Information Principal:
Mrs. Lavanya Rajmohan
Ph #:+1(210) 929-2458
Vice-Principal:
Mrs. Beulah Grace Gopi
Ph #:+1(210) 306-9867
E-Mail: principal@satamilschool.org